இந்தியா

காசநோயாளிகளை தத்தெடுத்த மத்திய அமைச்சர்

பிரதமரின் டிபி முக்த் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் மகாராஷ்டிரத்தின் தானே மாவட்டத்தில் உள்ள 5000 காசநோயாளிகளை மத்திய அமைச்சர் கபில் பாட்டீல் தத்து எடுத்துக் கொண்டார்.

DIN

பிரதமரின் டிபி முக்த் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் மகாராஷ்டிரத்தின் தானே மாவட்டத்தில் உள்ள 5000 காசநோயாளிகளை மத்திய அமைச்சர் கபில் பாட்டீல் தத்து எடுத்துக் கொண்டார்.

இந்த காசநோயாளிகள் அனைவரும் மத்திய அமைச்சரின் மக்களவைத் தொகுதியான பிவாண்டியைச் சேர்ந்தர்வர்கள் ஆவர்.

இந்த காசநோயிலிருந்து காக்கும் டிபி முக்த் அபியான் திட்டம் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தனிப்பட்ட ஒருவரோ அல்லது ஒரு நிறுவனமோ காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை கவனித்துக் கொள்ளலாம்.

காசநோயாளிகளை தத்து எடுத்துக் கொண்டது குறித்து மத்திய அமைச்சர் கபில் பட்டீல் பேசியதாவது: “ மகாராஷ்டிரத்தின் பிவாண்டி மக்களவைத் தொகுதியில் 5000 காசநோயாளிகள் உள்ளதாக சுகாதரத்துறை மூலம் தெரிந்து கொண்டேன். நான் அவர்கள் அனைவரையும் தத்து எடுத்துக் கொண்டுள்ளேன். என்னுடைய நோக்கம் பிவாண்டி தொகுதியை காசநோய் இல்லாத தொகுதியாக மாற்றுவதே ஆகும். அவர்கள் அனைவரையும் 6 மாத காலத்திற்கு தத்து எடுத்துள்ளேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதத்திற்கு 600 ரூபாய் செலவாகும். நோயாளிகள் அனைவருக்கும் அரசின் மருந்துகள் வழங்கப்படும். யாரெல்லாம் இந்தத் திட்டத்தின் கீழ் காசநோயாளிகளை தத்தெடுத்துக் கொள்ள முடியுமோ அவர்கள் அனைவரும் நோயாளிகளை தத்தெடுத்து இந்த திட்டத்தின் மூலம் காசநோயினை ஒழிக்க உதவ வேண்டும்.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்சாரம் பாய்ந்து பெண் பலி

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி: இன்று 20-ஆவது தவணை வெளியீட்டு விழா

அமெரிக்காவுடன் நல்லுறவு தொடரும்: இந்தியா நம்பிக்கை

காஸாவில் அமெரிக்க தூதா் சுற்றுப் பயணம்

திட்டங்களில் முதல்வா் பெயா்: அனுமதிக்கக் கோரி தமிழக அரசு மனு

SCROLL FOR NEXT