இந்தியா

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சூடு: காவல் அதிகாரி வீர மரணம்

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் செக்போஸ்ட்டில் பங்கரவாதிகளுடன் நடத்திய துப்பாகிச்சூட்டில் காவல் அதிகாரி ஒருவர் வீர மரணம் அடைந்தார். சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். 

DIN


புல்வாமா: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் செக்போஸ்ட்டில் பங்கரவாதிகளுடன் நடத்திய துப்பாகிச்சூட்டில் காவல் அதிகாரி ஒருவர் வீர மரணம் அடைந்தார். சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். 

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் செக்போஸ்ட் பகுதியில் மத்திய பாதுகாப்புப் படையினரும் போலீசாரும் இணைந்து ரோந்து பகுதியில் ஈடுபட்டிருந்தனர். 

இந்நிலையில், அந்த பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு மற்றும் போலீசார் தக்க பதிலடி கொடுத்தனர். 

இந்நிலையில், பங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காவல் அதிகாரி ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். 

இதையடுத்து அந்த பகுதிக்கு கூடுதலாக அனுப்பப்பட்டுள்ள பாதுகாப்புப் படை வீரர்கள், அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT