இந்தியா

குருகிராமில் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி, மூவர் காயம்!

குருகிராமில் பழைய தொழிற்சாலை கட்டடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார், மூவர் காயமடைந்தனர். 

DIN

குருகிராமில் பழைய தொழிற்சாலை கட்டடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார், மூவர் காயமடைந்தனர். 

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 

உத்யோக் விஹார் கட்டம் 1இல் இடிந்து விழுந்த தொழிற்சாலையின் இடிபாடுகளிலிருந்து 4 தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

இன்று காலை 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்தபோது, 12-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலையை இடிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

மூன்று மாடிக் கட்டிடத்தை இடிக்கும் பணி கடந்த செப்டம்பர் 26-ம் தேதி முதல் நடைபெற்று வருவதாகவும், தொழிற்சாலையின் 2 தளங்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கடைசி தளத்தின் மேற்கூரை உள்வாங்கியதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்ததும் சிவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

SCROLL FOR NEXT