இந்தியா

கர்பா நடனம் ஆடிய மகன் திடீர் உயிரிழப்பு: அதிர்ச்சியில் தந்தையும் மரணம்! 

மகாராஷ்டிரத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தில் கர்பா நடனமாடிக் கொண்டிருந்த மகன் திடீரென உயிரிழந்த சம்பவத்தைக் கேட்டு தந்தையும் இறந்த சம்பவம் இரட்டை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

மகாராஷ்டிரத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தில் கர்பா நடனமாடிக் கொண்டிருந்த மகன் திடீரென உயிரிழந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட தந்தையும் மாரடைப்பால் இறந்த சம்பவம் அப்பகுதியில் இரட்டை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பால்கர் மாவட்டத்தில் விரார் நகரில் நவராத்திரி கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்தது. அதன் ஒரு பகுதியாக கர்பா நடனம் ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எவர்ஷைன் நகரில் உள்ள குளோபல் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் மனிஷ் நராப்ஜி சோனிக்ரா (35) என்பவர் கர்பா ஆடிக் கொண்டிருந்தார். அவருடன் அவரது தந்தையும் இருந்தார். 

இந்நிலையில் மணீஷ் திடீரென நடனம் ஆடியபடியே மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இதையறிந்து அதிர்ச்சியடைந்த, அவரது தந்தை நராப்ஜி சோனிக்ரா (66) அந்த இடத்திலேயே அவரும் உயிரிழந்தார்.

இதன்பின்னர், இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை விரார் நகரில் இறந்த தந்தை-மகன் இருவரின் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.  இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

SCROLL FOR NEXT