சபர்மதி ஆசிரமத்தில் குடியரசுத் தலைவர்! காந்தி சிலைக்கு மரியாதை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்தில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாள் நேற்று(அக்.2) நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நேற்று தில்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றுள்ளார்.
அங்குள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சபர்மதி ஆசிரமத்தைப் பார்வையிட்ட அவர், ராட்டையில் நூல் நூற்றார்.
குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் உடனிருந்தனர்.