இந்தியா

குனோ தேசிய பூங்காவில் உள்ள சிறுத்தைகளை கண்காணிக்க குழு அமைப்பு!

மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் உள்ள சிறுத்தைகளை கண்காணிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

DIN

புது தில்லி: மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் உள்ள சிறுத்தைகளை கண்காணிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு உறுப்பினர்கள் சிறுத்தைகளின் முன்னேற்றம் மற்றும் சுகாதார நிலையை கண்காணிப்பதில் கவனம் செலுத்துவார்கள் மற்றும்  சிறுத்தைகளின் வேட்டையாடும் திறன் போன்றவற்றை கண்காணிப்பார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி தனது 72 ஆவது பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் 8 சிறுத்தைகளை விடுவித்தார்.

தென்மேற்கு ஆப்பிரிக்காவின் நமீபியாவில் இருந்து  8 சிறுத்தைகள் (5 பெண், 3 ஆண்) கொண்டு வரப்பட்டன. ஆண்டுதோறும் 8 முதல் 10 சிறுத்தைப் புலிகளைக் கொண்டு வந்து, 5 ஆண்டுகளில் 50 என்ற எண்ணிக்கையை எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் சிறுத்தைப் புலிகளின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தற்போது உலகம் முழுவதும் சுமாா் 7,000 சிறுத்தைப் புலிகளே காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆப்பிரிக்க காடுகளிலேயே உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT