நல்ல 5ஜி ஸ்மார்ட்ஃபோன் வாங்க இரண்டு மடங்கு செலவாகுமோ? 
இந்தியா

நல்ல 5ஜி ஸ்மார்ட்ஃபோன் வாங்க இரண்டு மடங்கு செலவாகுமோ?

மக்கள் இனி ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்ஃபோன் வாங்க வேண்டும் என்றால், கூடுதலாக ரூ.10,000 செலவிட வேண்டியதிருக்கலாம் என்கிறார்கள் தொழிற்துறை வல்லுநர்கள்.

DIN


மக்கள் இனி ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்ஃபோன் வாங்க வேண்டும் என்றால், கூடுதலாக ரூ.10,000 செலவிட வேண்டியதிருக்கலாம் என்கிறார்கள் தொழிற்துறை வல்லுநர்கள்.

அதாவது, ஒரு நல்ல தரமான 5ஜி ஸ்மார்ட்ஃபோனை வாங்க வேண்டும் என்றால், இனி ரூ.20,000-க்கு மேல் செலவாகும் என்கிறார்கள்.

தற்போது ஒருவர் நல்ல 4ஜி ஸ்மார்ட்ஃபோன் வாங்க வேண்டும் என்றால் ரூ.12,000 செலவிட்டால் போதும். ஆனால், எந்த விஷயத்தையும் விட்டுக் கொடுக்காமல் ஒரு தரமான 5ஜி ஸ்மார்ட்ஃபோன் வாங்க வேண்டும் என்றால் ரூ.22,000 தேவை என்கிறார் கௌண்டர்பாயிண்ட் ரிசர்ச் நிறுவன ஆய்வு இயக்குநர் தௌன் பதக்.

நாட்டில் 5ஜி ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தியை, செல்லிடப்பேசி உற்பத்தி நிறுவனங்கள் தொடங்கிவிட்டன. இனி 5ஜி ஸ்மார்ட்ஃபோன் விற்பனைதான் அதிகரிக்கத் தொடங்கும்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 5ஜி ஸ்மார்ட்ஃபோன் ஏற்றுமதி 31 சதவீதமாக உள்ளது. இது விரைவில் 35 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பண்டிகைக் காலத்தில் விற்பனையாகும் தலா மூன்று ஸ்மார்ட்ஃபோன்களில் ஒன்று 5ஜி ஸ்மார்ட்ஃபோன்  ஆகவே இருக்கும் என்றும் கௌண்டர்பாயிண்ட் ரிசர்ச் தெரிவித்துள்ளது.

இது, நாட்டில் உள்ள ஸ்மார்ட்ஃபோன்  உற்பத்தி நிறுவனங்களுக்கு மிகச் சிறந்த எதிர்காலத்தைக் காட்டுகிறது. ஆனால், நுகர்வோருக்கு அவ்வாறு இருக்காது. 

அதாவது, 5ஜி அறிமுகம் மற்றும் விநியோக சங்கிலித் தொடரில் இருக்கும் சிக்கல்கள் காரணமாக 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களின் விலை 15 - 25 சதவீதம் அளவுக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களின் விலைகள் ரூ.25,000 அளவுக்கு உயரும் என்றும், நுகர்வோர் வேறுவழியின்றி அதை வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

5ஜி ஸ்மார்ட்ஃபோன் விலைகள் ஒரு கணிப்பு
ஒரு நடுத்தர 5ஜி ஸ்மார்ட்ஃபோன்  விலை ரூ.20,000க்கு மேல் இருக்கலாம்.
5ஜி ஸ்மார்ட்ஃபோன்களின் விலை 15 - 25 சதவீதம் அளவுக்கு உயரலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT