இந்தியா

குஜராத்: ரூ.350 கோடி ஹெராயின் பறிமுதல்! 

DIN

குஜராத்தில் ரூ.350 கோடி மதிப்புள்ள 50 கிலோ ஹெராயின் போதைப்பொருள்களை இந்தியக் கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். 

இந்தியக் கடலோர காவல் படையினர் மற்றும் குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படை இணைந்து நடத்திய சோதனையில், சர்வதேச கடல் பகுதியின் அருகே 6 பணியாளர்களுடன் பயணித்த அல் சாகர் என்ற பாகிஸ்தான் கப்பலில் ரூ.350 கோடி மதிப்பிலான 50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும், விசாரணைக்காக, அவர்கள் ஜகா பகுதிக்குக் கொண்டு செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு முதல் இந்தியக் காவல்படை, ஏடிஎஸ் இணைந்து நடத்தும் 6வது சோதனை இதுவாகும். 

முன்னதாக, கடந்த செப்.14ல் பாகிஸ்தான் படகு ஒன்றில் சுமார் ரூ.200 கோடி மதிப்புள்ள 40 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஐடி வேந்​தர் கோ.வி​சு​வ​நா​த​னுக்கு மேலும் ஒரு கௌ​ரவ டாக்​டர் பட்டம்

நாட்டின் வளர்ச்சியில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு

பாலம் கட்டுமானப் பணிகள்: ஆணையர் ஆய்வு

'இந்தியா' கூட்டணி 315 இடங்களில் வெற்றி பெறும்: மம்தா பானர்ஜி

லக்னௌவை வென்றது டெல்லி: "பிளே-ஆஃப்' சுற்றில் ராஜஸ்தான்

SCROLL FOR NEXT