இந்தியா

“அம்பானியோ, அதானியோ யாராக இருந்தாலும் வரவேற்கிறோம்”: தொழில் முதலீடு குறித்து ராஜஸ்தான் முதல்வர் கருத்து 

ராஜஸ்தானில் தொழில்துறை முதலீடு மேற்கொள்வதற்கு அதானியோ, அம்பானியோ அல்லது அமித்ஷாவின் மகனோ யாராக இருந்தாலும் வரவேற்கிறோம் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

DIN

ராஜஸ்தானில் தொழில்துறை முதலீடு மேற்கொள்வதற்கு அதானியோ, அம்பானியோ அல்லது அமித்ஷாவின் மகனோ யாராக இருந்தாலும் வரவேற்கிறோம் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான் தலைநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழில்முதலீட்டு மாநாட்டில் பிரபல தொழிலதிபர் அதானி கலந்து கொண்டார். ராஜஸ்தான் முதல்வருடன் மேடையைப் பகிர்ந்து கொண்ட அவர் மாநிலத்தில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார். 

தொடர்ந்து அதானி குழுமத்துடன் மாநில அரசு ரூ.35,000 மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அதானியின் தொழில் வளர்ச்சிக்கு பாஜக துணைபோவதாக குற்றம் சுமத்தி வரும் நிலையில் ராஜஸ்தான் முதல்வரின் செயல் விமர்சனத்திற்குள்ளானது. 

இந்நிலையில் இதுகுறித்து பதிலளித்துள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், “ராஜஸ்தான் மாநிலத்தில் வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.தொழில் முதலீடுகளை ஏற்படுத்த அதானியோ, அம்பானியோ அல்லது அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவோ யாராக இருந்தாலும் வரவேற்க தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்தார். 

இந்த மாநாட்டின் மூலம் 11 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன்மூலம் 3 லட்சத்து 55 ஆயிரம் வேலைவாய்ப்புகள் ஏற்படும்” எனத் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT