இந்தியா

பிகாரில் ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொலை

DIN

பிகார் மாநில அரசின் உத்தரவைத் தொடர்ந்து ஆட்கொல்லி புலியை  வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

பிகார் மாநிலத்தில் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ளது வால்மீகி புலிகள் சரணாலயம். இந்த சரணாலயத்தில் நாட்டிலேயே அதிகளவாக 40 புலிகள் உள்ளன. 

இந்நிலையில் இந்த சரணாலயத்திலிருந்து புலி ஒன்று அருகில் இருந்த குடியிருப்பு பகுதிக்குள் கடந்த செப்.12ஆம் தேதி நுழைந்தது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். 

இதுவரை 9 பேரை கொன்றுள்ள புலியைப் பிடிக்க வனத்துறையினரும் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். எனினும் இதுவரை அந்தப் புலியைப் பிடிக்க முடியவில்லை. 

இந்நிலையில் ஆட்கொல்லி புலியைப் கண்டதும் சுட்டுக் கொல்ல மாநில அரசு சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் 3.5 வயதான ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT