முகப்பு
இந்தியா

உ.பி.யில் வெள்ள நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த முதல்வர் உத்தரவு!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:32 AM
பகிர்:

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

பருவமற்ற மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடவும், வெள்ள நீர் தேங்கிய பகுதிகளில் ஆய்வு நடத்தவும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்கவும், அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லவும், அவர்கள் தங்குவதற்கும், உணவு வழங்குவதற்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறும் அவர் உத்தரவிட்டார்.

உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், பல இடங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. 

மேலும், வருவாய்த்துறை, காவல்துறை, பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சி, மருத்துவம் மற்றும் சுகாதாரம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளின் அதிகாரிகளும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில், மோட்டார் பம்புகளை பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்றார்.

நிவாரண ஆணையர் அலுவலக அறிக்கையின்படி, மாநிலத்தில் 16 மாவட்டங்களில் 650க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, சுமார் 5.8 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →