முகப்பு
இந்தியா

தில்லியில் 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு!

தில்லியில் கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு அக்டோபரில் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:32 AM
பகிர்:

தில்லியில் கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு அக்டோபரில் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

அக்டோபர் மாதத்தில் இதுவரை பெய்த மழைப்பொழிவானது, ஆகஸ்ட் மாதத்தில் பதிவான மழையை விட மூன்று மடங்கு அதிகமாக பெய்துள்ளது. 

கடந்தாண்டு அக்டோபர் மாதம் தேசிய தலைநகரில் 122.5 மி.மீ மழை பெய்துள்ளது. 

முன்னதாக, 2020, 2018 மற்றும் 2017 அக்டோபரில் மழைப் பதிவாகவில்லை. நகரில் 2019 அக்டோபரில் 47.3 மி.மீ மழைப் பதிவானது. 

சூறாவளி சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தலைநகரில் பருவமழை செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 24 வரை தாமதமாகப் பெய்தது.

இதையடுத்து, கடந்த மூன்று வாரங்களுக்குள், இரண்டாவது முறையாக அதிக மழைப்பொழிவு தொடர்ந்து மூன்று நாள்களாக பெய்துள்ளது. இது பருவமில்லாத மழைப்பொழிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தில்லியில் இந்தாண்டு இதுவரை 790 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இது 16 ஆண்டுகளில் இல்லாத வகையில், இயல்பை விட அதிக மழைப்பொழிவு என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →