இந்தியா

நாட்டில் புதிதாக 2,424 பேருக்கு கரோனா: 2,923 பேர் மீண்டனர்!

நாட்டில் புதிதாக 2,424 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 15 பேர் உயிரிழந்துள்ளனர். 

DIN


நாட்டில் புதிதாக 2,424 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 15 பேர் உயிரிழந்துள்ளனர். 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. 

இந்நிலையில், நாட்டில் புதிதாக 2,424 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,14,437 ஆக உள்ளது. அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் 15 இறந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,28,814 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 28,079 ஆகக் குறைந்துள்ளது. 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,923 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,57,544 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 98.75% ஆக அதிகரித்துள்ளது. வாராந்திர தொற்று பாதிப்பு விகிதம் தற்போது 1.27% ஆக உள்ளது

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 2,18,99,72,644 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 1,84,540 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 12-14 வயதிற்குட்பட்ட இளம் பருவத்தினருக்கான முதல் தவணை டோஸ் தடுப்பூசி 4,10,73,529 கோடிக்கு மேல் செலுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் இதுவரை 89.71 கோடிக்கு மேல் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 91,458 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கள்ளக்குறிச்சியில் நிறைவுற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

பிரபல யூடியூபா் வீட்டின் முன் குற்றச்சாட்டு: 2 போ் கைது

இணையவழி வா்த்தகத்துக்கு எதிராக திருச்சியில் ஆக.30-இல் முற்றுகைப் போராட்டம்: விக்கிரமராஜா

17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணா்கள் மூலம் சேவைகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தகவல்

‘கைப்பேசிக்கு வரும் குறுஞ்செய்தி லிங்க்கை தொடவேண்டாம்’

SCROLL FOR NEXT