மகளை பள்ளிக்கு அனுப்பியதால் பெற்றோருக்கு நேர்ந்த துயரம் 
இந்தியா

தலையில் நரம்புகள் வெடிக்கும் அளவுக்கு மாணவனை அடித்தேக் கொன்ற ஆசிரியர்!

கிரேட்டர் நொய்டாவின் கௌதம் புத்தா நகரில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் மாணவனை ஆசிரியர் அடித்தே கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. 

DIN

கிரேட்டர் நொய்டாவின் கௌதம் புத்தா நகரில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் மாணவனை ஆசிரியர் அடித்தே கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. 

பாம்பாவாட்- மஹாவத் சாலையில் அமைந்துள்ள கேப்டன் சன்வாலியா பப்ளிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான் மாணவன். 

அக்டோபர் 06ம் தேதி அந்த பள்ளி ஆசிரியர் சூரன் மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகும்படி கேட்டுக்கொண்டார். அடுத்த நாள் மாணவன் ஒருவனை கேள்வி கேட்டுள்ளார். பதிலளிக்காததால், ஆசிரியர் கோபமடைந்து சிறுவனை இரக்கமின்றி தலையிலும், முதுகிலும் சரமாரியாக அடித்துள்ளார். 

அதைத்தொடர்ந்து சிறுவன் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளான். சக ஆசிரியர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தில்லியில் உள்ள நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

பலத்த அடி காரணமாக சிறுவனின் தலையில் மூன்று நரம்புகள் வெடித்துச் சிதறியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவன் ஞாயிற்றுக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். 

இதைத்தொடர்ந்து ஆசிரியர் சூரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஆசிரியரைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT