முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் பாஜக தலைவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை!

மகாராஷ்டிரத்தின், பீட் மாவட்ட பாஜக தலைவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:32 AM
பகிர்:

மகாராஷ்டிரத்தின், பீட் மாவட்ட பாஜக தலைவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாஜகவின் பீட் மாவட்டப் பிரிவின் தலைவரான பகீரத் பியானி, மீரா நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் உரிமம் பெற்ற துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு பியானியின் குடும்பத்தினர், அவரை உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

50 வயதுடைய பாஜக தலைவர் கடந்த சில நாள்களாக உடல்நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்ததாக குடும்பத்தினர் கூறினர். 

மேலும், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →