இந்தியா

உ.பி.யில் சுவர் இடிந்து விழுந்து இளைஞர் பலி!

உத்தரப் பிரதேசத்தின் பதான் பகுதியில் கனமழையைத் தொடர்ந்து, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 

DIN

உத்தரப் பிரதேசத்தின் பதான் பகுதியில் கனமழையைத் தொடர்ந்து, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 

பதான் பகுதியில் திங்கள்கிழமை மாலை நாக்லா தரு கிராமத்தைச் சேர்ந்த வீரேந்திரா என்பவர் வீட்டின் கழிப்பறையின் சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார் என்று காவல்துறை கண்காணிப்பாளர் சித்தார்த் வர்மா தெரிவித்தார். 

சம்பவ இடத்திலிருந்த இளைஞரின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர்வாசிகள் அவரை இடிபாடுகளிலிருந்து மீட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தார். 

உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுசு ராசிக்கு மனமகிழ்ச்சி: தினப்பலன்கள்!

காஞ்சிபுரத்தில் தமிழறிஞா்களுக்கு விருது

சித்தராமையாவுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

திருமலையில் ரூ. 26 கோடி செலவில் விருந்தினா் மாளிகை திறப்பு!

திருமலை, திருப்பதியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT