இந்தியா

ஃபேஸ்புக் ஃபாலோவர்ஸ் குறைகிறதா? குவியும் புகார்கள்; நிர்வாகம் பதில்

DIN


 
முகநூலில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸுக்கர்பெர்க்-கிற்கு பயனாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

எந்த காரணத்திற்காக பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் முகநூல் பயனாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் முகநூல் நிறுவனம் உலகம் முழுவதும் பல பயனாளர்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில், சமீபகாலமாக முகநூலில் தனிப்பட்ட பயனர்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.

பயனாளர்கள் மட்டும் இந்த பிரச்னையை சந்திக்கவில்லை. முகநூல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸுக்கர்பெர்க்-கிற்கும் பின்தொடர்பாளர்கள் எண்ணிகை கணிமாக குறைந்துள்ளது. இதுவரை 119 மில்லியன் பின்தொடர்பாளர்கள் குறைந்துள்ளதாகவும், 10 ஆயிரம் பேர் மட்டுமே பின்தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள முகநூல் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், விரைவில் இந்த பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT