முகப்பு
இந்தியா

கோவா: போர் விமானம் விபத்து

கோவா கடல்பகுதியில் வழக்கமான பயணத்தின்போது இந்தியப் போர் விமானம் விபத்திற்குள்ளானது.

Updated On : 12 அக்டோபர், 2022 at 11:50 AM
கோப்புப்படம்
பகிர்:

கோவா கடல்பகுதியில் வழக்கமான பயணத்தின்போது இந்தியப் போர் விமானம் விபத்திற்குள்ளானது.

கோவா கடலோரப்பகுதியில் இன்று இந்திய கப்பல்படையின் மிக் 29கே ரக போர் விமானம் வழக்கமான பயிற்சி பயணத்தை மேற்கொண்டது.

அப்போது, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததால் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாகவும் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த மீட்புப்படை விமானியை உயிருடன் மீட்டதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

மேலும், விமானம் விபத்திற்குள்ளானது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.