அகிலேஷ் யாதவை சந்தித்தார் பிகார் முதல்வர் 
இந்தியா

உ.பி.: அகிலேஷ் யாதவை சந்தித்தார் பிகார் முதல்வர்

முலாயம் சிங் மறைவையொட்டி அவரின் மகன் அகிலேஷ் யாதவை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். 

DIN


முலாயம் சிங் மறைவையொட்டி அவரின் மகன் அகிலேஷ் யாதவை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். 

முலாயம் சிங் யாதவ் உடல் தகனம் செய்யப்பட்ட அவரின் சொந்த கிராமமான உத்தரப் பிரதேச மாநிலம் சைஃபயி கிராமத்திற்கு நிதீஷ் குமார் சென்று சந்தித்தார். 

உத்தர பிரதேச முதல்வா், பாதுகாப்புத் துறை அமைச்சா் எனப் பல்வேறு பதவிகளை வகித்தவரும் சமாஜவாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானாா்.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சொந்த ஊரான உத்தர பிரதேசத்தின் சைஃபயிக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் அரசு மரியாதையுடன் அவரின் உடல் அவரின் சொந்த ஊரிலேயே தகனம் செய்யப்பட்டது. 

அவரின் இறுதிச்சடங்கில் பல்வேறு மாநில தலைவர்கள் கலந்துகொண்டனர். அந்தவகையில் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த மற்ற மூத்த தலைவர்களுடன் உத்தரப் பிரதேச மாநிலத்திற்குச் சென்று நிதீஷ் குமாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

முன்னதாக முலாயம் சிங் யாதவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT