இந்தியா

தீபாவளி சலுகை! ஒரு 'டிக்கெட்' வைத்து 5 முறை பேருந்துகளில் பயணிக்கலாம்!

தீபாவளி பண்டிகையையொட்டி ஒரு முறை டிக்கெட் எடுத்தால் அதனைப் பயன்படுத்தி 5 முறை பயணிக்கலாம் என மும்பை போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. 

DIN


தீபாவளி பண்டிகையையொட்டி ஒரு முறை டிக்கெட் எடுத்தால் அதனைப் பயன்படுத்தி 5 முறை பயணிக்கலாம் என மும்பை போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. 

எண்ம (டிஜிட்டல்) பயணச் சீட்டுகள் பயன்பாட்டிற்கொ கொண்டுவருவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த சலுகை வழங்கப்படுவதாக பிர்ஹான் மும்பை மின்சார மற்றும் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மும்பையில் உள்ள பேருந்துகளில் தீபாவளிப் பண்டிகையையொட்டி ஒரு வாரத்திற்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சலோ செயலி மூலம் முதல்முறை எண்ம டிக்கெட் எடுப்பவர்கள் அந்த டிக்கெட்டைப் பயன்படுத்தி 5 முறை பேருந்துகளில் பயணித்துக்கொள்ளலாம். இந்த டிக்கெட்டின் விலை ரூ.9 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த டிக்கெட்டை வைத்து 7 நாள்களுக்கு எந்த வழித்தடத்தில் வேண்டுமானாலும் பயணித்துக்கொள்ளலாம் என பிர்ஹான் மும்பை மின்சார மற்றும் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மும்பை பேருந்துகளில் எண்ம பயணச்சீட்டு பயன்பாட்டை மக்களிடையே பரவலாக கொண்டுசேர்க்கும் வகையில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை அனைத்து வகையான சொகுசு மற்றும் குளிர்சாதனப் பேருந்துகளுக்கும் பொருந்தும் எனவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அந்த வெள்ளைச் சிரிப்பில்... சஞ்சிதா உகாலே!

உணர்வுகளை மறைப்பதில் நான் கெட்டிக்காரியல்ல... நியதி ஃபட்னானி!

சேலையில் பெரிய சந்தோஷம்... கரீஷ்மா டன்னா!

ஈரோடு மாவட்டத்திற்கு முதல்வரின் 6 முக்கிய அறிவிப்புகள்!

இளையராஜா காப்புரிமை கொடுத்து விடுவார்: கங்கை அமரன்

SCROLL FOR NEXT