முகப்பு
இந்தியா

அமித்ஷாவிற்கு என்ன தெரியும்? பதிலடி கொடுத்த பிகார் முதல்வர் நிதீஷ் குமார்

பிகார் அரசியல் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணனின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு குற்றம்சாட்டிய அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு நிதிஷ் குமார் பதிலளித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:33 AM
பிகார் முதல்வர் நிதீஷ் குமார்
பகிர்:

பிகார் அரசியல் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணனின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு குற்றம்சாட்டிய அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு நிதீஷ் குமார் பதிலளித்துள்ளார். 

‘நெருக்கடிநிலை பிரகடனத்துக்கு எதிரான போராடிய ஜெயப்பிரகாஷ் நாராயண் பிறந்த இடமான பிகாரின் சரண் மாவட்டம், சிதாப் தியாராவில் அவரது 15 அடி உயர சிலையை அமித் ஷா செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா். அதனைத் தொடர்ந்து பேசிய அவர் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் காங்கிரஸ் துணையுடன் ஆட்சியில் அமர்ந்து ஜெயபிரகாஷ் நாராயணனின் அரசியல் நோக்கங்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து பதிலளித்து பேசிய பிகார் முதல்வர் நிதீஷ் குமார், “நரேந்திரமோடி. அமித்ஷா பேசுவதற்கு பெரிய முக்கியத்துவத்தை கொடுக்க நான் விரும்பவில்லை. அவர்கள் ஜெயபிரகாஷ் நாராயணனின் அரசியலுக்கு ஏதாவது வகையில் உதவியுள்ளனரா?

சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெறாதவர்கள் ஜெயபிரகாஷ் நாராயணனின் அரசியல் இயக்கத்தைப் பற்றி பேசுகின்றனர். 2002க்கு முன்பு நரேந்திர மோடியை யாருக்கு தெரியும்? அவசர காலத்தில் நான் சிறைக்கு சென்றிருக்கிறேன். மோடியும், அமித் ஷாவும் அறியாமையில் உள்ளனர்” என நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →