முகப்பு
இந்தியா

உ.பி.யில் கர்ப்பிணிப் பெண் கொடூரக் கொலை!

உத்தரப் பிரதேசத்தில் எட்டு மாத கர்ப்பிணிப் பெண்ணும், அவரது சகோதரியும் கொடூரமான முறையில் உறவினர்களால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:33 AM
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் எட்டு மாத கர்ப்பிணிப் பெண்ணும், அவரது சகோதரியும் கொடூரமான முறையில் உறவினர்களால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இறந்தவர்கள் ஷேகுபுரா கிராமத்தைச் சேர்ந்த லஜ்ஜாவதி மற்றும் மஞ்சு(10) என அடையாளம் காணப்பட்டனர். 

லஜ்ஜாவதியின் கணவர் கமல் சிங் ஹரியாணாவில் பணிபுரிந்து வருகிறார். லஜ்ஜாவதியும், அவரது தங்கையும் கணவர் வீட்டிலிருந்துள்ள நிலையில், அவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், கணவரின் தம்பிகளான ஜண்டேல் மற்றும் போஹ்ரி ஆகிய இருவரும் இணைந்து, கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் அவரையும், அவளது தங்கையையும்  கூர்மையான ஆயுதம் கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளனர். 

இதில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த 
சம்பவத்தையடுத்து குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக சம்பவ இடத்துக்கு வந்த மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளைத் தேடி வருவதாகவும் கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →