முகப்பு
இந்தியா

சூரிய, சந்திர கிரகணம்: திருப்பதி கோயில் 12 மணி நேரம் திறக்கப்படாது

அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணமும், நவம்பர் 8ஆம் தேதி சந்திர கிரகணமும் நிகழவுள்ளதையொட்டி, திருப்பதி தேவஸ்தானம் மூடப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:33 AM
திருப்பதி
பகிர்:

அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணமும், நவம்பர் 8ஆம் தேதி சந்திர கிரகணமும் நிகழவுள்ளதையொட்டி, திருப்பதி தேவஸ்தானம் மூடப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அன்றைய நாட்களில் திருப்பதி ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

நடப்பாண்டுக்கான சூரிய கிரகணம் வரும் 25ஆம் தேதியும், நவம்பர் 8ம்தேதி சந்திர கிரகணமும் ஏற்படுகிறது. 

அதன்படி வரும் 25ஆம் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழும். இதனால், அன்றைய நாள் காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோயில் மூடப்பட்டிருக்கும். அதன்பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

அதேபோல், நவம்பர் 8ஆம் தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. அன்றைய நாள் கோயில் கதவுகள் காலை 8.40 மணி முதல் இரவு 7.20 மணி வரை மூடப்பட்டிருக்கும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →