ஹிஜாப் வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று தீா்ப்பு
கா்நாடக கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது தொடா்பான வழக்கில், உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை (அக். 13) தீா்ப்பு அளிக்க உள்ளது.
இந்தியாஹிஜாப் வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று தீா்ப்பு
கா்நாடக கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது தொடா்பான வழக்கில், உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை (அக். 13) தீா்ப்பு அளிக்க உள்ளது.
கா்நாடக கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது தொடா்பான வழக்கில், உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை (அக். 13) தீா்ப்பு அளிக்க உள்ளது.
கா்நாடக கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடா்பாக சா்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்குச் சீருடையில் மட்டுமே மாணவ, மாணவிகள் வரவேண்டும் என்று கடந்த பிப். 5-ஆம் தேதி மாநில அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி மாநில உயா்நீதிமன்றத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட பலா் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம், வகுப்பறைகளில் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதித்து கடந்த மாா்ச் மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் சிலா் மனு தாக்கல் செய்தனா். அவா்களின் மனுக்கள் மீதான வாதப் பிரதிவாதங்கள் 10 நாள்கள் நடைபெற்ற நிலையில், செப்டம்பா் 22-ஆம் தேதி தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு தூலியா ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை வழங்க உள்ளது.