இந்தியா

கேரள நரபலி விவகாரம்: உடலை சாப்பிட்டதாகக் கூறுவதை மறுக்கும் குற்றவாளிகள்

கேரளத்தில் இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் நரபலி கொடுக்கப்பட்டவர்களை சாப்பிட்டதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளனர்.

DIN

கேரளத்தில் இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் நரபலி கொடுக்கப்பட்டவர்களை சாப்பிட்டதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளனர்.

குற்றவாளிகளான லைலா மற்றும் அவரது கணவர் பகவல் சிங் இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது, லைலா நாங்கள் நரபலி கொடுத்தவர்களை சாப்பிடவில்லை எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த கொலை வழக்கில் கைதாகியுள்ள மூவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, காவல் துறை தரப்பில் கொடுக்கப்பட்ட தகவலின்படி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அந்தத் தம்பதி நரபலி கொடுக்கப்பட்டவர்களை சாப்பிட்டதாக காவல் துறை தரப்பில் தகவல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த குற்றச்சாட்டினை குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான லைலா மறுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப்.7-ல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!

போப் பதினான்காம் லியோவுடன் இஸ்ரேல் அதிபர் சந்திப்பு!

சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதே பேரழிவுக்கு காரணம்: உச்ச நீதிமன்றம்

அக்கறை காட்ட ஒன்று கூடுங்கள்: தினேஷ் கார்த்திக்

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது: மோகன் யாதவ்!

SCROLL FOR NEXT