கோப்புப்படம் 
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 3 வெடிகுண்டுகள் நிறைந்த பை கண்டுபிடிப்பு! 

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் வனப் பகுதியில் ஒரு பையில் மூன்று சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் அடங்கிய பையை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்ததால் பெரும் குண்டுவெடிப்பு சம்பவம் முறியடிக்கப்பட்டது. 

DIN

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் வனப் பகுதியில் ஒரு பையில் மூன்று சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் அடங்கிய பையை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்ததால் பெரும் குண்டுவெடிப்பு சம்பவம் முறியடிக்கப்பட்டது. 

புதன்கிழமை இரவு ராணுவம் மற்றும் காவல்துறையினரின் கூட்டுத் தேடுதல் குழுவினரால் கூல் சப்-டிவிஷனில் உள்ள சங்கல்தான் வனப்பகுதியில் பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. 

வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கையின் போது எவரும் கைது செய்யப்படவில்லை, வெடிகுண்டு செயலிழக்கும் படை பையில் மூன்று சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் இருப்பதை உறுதி செய்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, பயங்கரவாதிகள் மாவட்டத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் காலமானார்

ரஷியாவின் எண்ணெய் கொள்முதலை நிறுத்த இந்தியா சம்மதம்.. மீண்டும் உறுதிப்படுத்திய அமெரிக்கா!

கன்னி ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்

கருத்துக் கணிப்புகளை கடந்து அதிக இடங்களில் திமுக வெற்றிபெறும்: அன்பில் மகேஸ்

பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை, சேலம், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து

SCROLL FOR NEXT