இந்தியா

பெண்ணின் துப்பட்டாவை இழுத்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல்

DIN

மும்பை: 15 வயது சிறுமியின் துப்பாட்டாவை இழுத்து, அவரது கையை பிடித்துக் கொண்டு கத்தினால் தாக்குவேன் என்று மிரட்டிய இளைஞருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு நடந்த இந்த வழக்கில், தீர்ப்பளித்த சிறப்பு போக்சோ நீதிமன்றம், குற்றவாளியான 23 வயது இளைஞருக்கு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளது.

சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், அதன் எதிர்விளைவாக, பாதிக்கப்படும் பெண்களும் அவர்களது குடும்பமும், இந்த சமுதாயமும்தான் அச்சத்தில் மூழ்குகின்றனர். தாங்கள் வாழும் இடமும் சுற்றுப்புறமும் பாதுகாப்பில்லாததாக உணர்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்படுவோரும் குடும்பத்தினரும் நீண்ட நாள்களுக்கு இந்த சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து வெளியே வர இயலாமல் துயரம் அடைகின்றனர் என்று நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும், இந்த வழக்கில், குற்றவாளி இளைஞர் 20 ஆயிரம் அபராதம் செலுத்தவும், அதில் 15 ஆயிரம் ரூபாய் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடாக அளிக்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர் பெண்ணின் வீட்டு முன்பு நின்றுகொண்டு அவ்வப்போது தொல்லை கொடுத்து வந்ததும், பெண் எங்குச் சென்றாலும் தொடர்ந்து சென்று துன்புறுத்தி வந்ததையும் நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT