இந்தியா

ரூ.12 லட்சம் கடனால் வீட்டை இழக்க இருந்தவருக்கு, 2 மணி நேரத்தில் கிடைத்த ரூ.70 லட்சம்

கேரளத்தில் 12 லட்ச ரூபாய் வங்கிக் கடனைக் கட்டமுடியாதவருக்கு 2 மணி நேரத்தில் ரூ.70 லட்சத்துக்கான லாட்டரி பரிசு கிடைத்துள்ளது. 

DIN

கேரளத்தில் 12 லட்ச ரூபாய் வங்கிக் கடனைக் கட்டமுடியாதவருக்கு 2 மணி நேரத்தில் ரூ.70 லட்சத்துக்கான லாட்டரி பரிசு கிடைத்துள்ளது. 

கேரள மாநிலம் கொள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் மீன் வியாபாரியான பூக்குஞ்சு(வயது 40). மிகவும் வறுமையில் இருக்கும் இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் கார்பரேசேன் வங்கியிலிருந்து வீடு கட்டுவதற்காக ரூ. 7.45 லட்சம் கடன் பெற்றுள்ளார். 

ஆனால் அவரால் கடன் தொகையைத் திரும்ப செலுத்த இயலவில்லை. இதன் காரணமாக அவர் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்ந்து ரூ. 12 லட்சமாக உயர்ந்தது. இதனையடுத்து கடனை திரும்ப செலுத்தாவிட்டால் வீடு ஜப்தி செய்யப்படும் என வங்கியிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

ஆனால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் லாட்டரி ரூபத்தில் அவருக்கு ரூ.70 லட்சம் கிடைத்திருக்கிறது. 

பூக்குஞ்சு எப்பொழுதாவது லாட்டரி சீட்டு வாங்குவார். அப்படி வாங்கிய லாட்டரி சீட்டு அவருக்கு கைகொடுத்திருக்கிறது. வீடு பரிபோகும் நிலையில் இருந்தவருக்கு லாட்டரி சீட்டு அவரை காப்பாற்றியிருக்கிறது.  இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் அண்ணன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் பிறந்த மண்! - மதுரை குறித்து Vijay | TVK

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளம்பெண்ணைக் குறிப்பிட்ட விஜய்!

இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஷ்ரேயாஸ் தந்தை வேதனை

தமிழக குழந்தைகளுக்குத் தாய்மாமன்! விஜய் பேச்சு

சாம்சன் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா.. யாரும் எதிர்பார்க்காத அதிரடி தள்ளுபடியில்!

SCROLL FOR NEXT