இந்தியா

ஊழலில் ஈடுபடும் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை: மெகபூபா முப்தி

DIN

தரவரிசையில் கீழே உள்ள அதிகாரிகள் விசாரணையின்றி வேலையிலிருந்து நீக்கப்படுகிறார்கள். ஆனால்,ஊழலில் ஈடுபடும் மூத்த அதிகாரிகள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மெகபூபா முப்தி குற்றம் சாட்டியுள்ளார்.

 ஜம்மு-காஷ்மீர் அரசாங்கம் அண்மையில் 36 காவல் துறை அதிகாரிகளை அவர்களது பணிக்காலம் முடியும் முன்பே அவர்களுக்கு ஓய்வளித்து அறிவித்தது. ஊழலில் ஈடுபட்டது, செயல்பாடுகளில் குறைபாடு மற்றும் சமுதாயத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது போன்றன அவர்களுக்கு பணி ஓய்வு கொடுக்கப்பட்டதற்கு காரணங்களாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மெகபூபா முப்தியின் இந்த குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுகிறது. 

இது குறித்து ட்விட்டர் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். 

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “துணை ஆளுநரின் கீழான நிர்வாகம் ஊழலில் ஈடுபடும் மூத்த அதிகாரிகளின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய அதிகாரிகள் பலர் உருவாகியுள்ளனர். அவர்களின் குற்றங்கள் மீது எந்த ஒரு விசாரணையோ, நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. ஆனால், தரவரிசை அடிப்படையில் கீழே உள்ள அதிகாரிகள் எந்த ஒரு விசாரணையுமின்றி வேலையிலிருந்து நீக்கப்படுகின்றனர்.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

SCROLL FOR NEXT