முகப்பு
இந்தியா

கடலுக்கு அடியிலிருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியாவின் ‘ஐஎன்எஸ் அரிஹந்த்’ அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல், ஏவுகணை வகைகளில் ஒன்றான பாலிஸ்டிக் ஏவுகணையை கடலுக்கு அடியிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் வெள்ளிக்கிழமை செலுத்தியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

இந்தியாவின் ‘ஐஎன்எஸ் அரிஹந்த்’ அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல், ஏவுகணை வகைகளில் ஒன்றான பாலிஸ்டிக் ஏவுகணையை கடலுக்கு அடியிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் வெள்ளிக்கிழமை செலுத்தியது.

இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நீா்மூழ்கிக் கப்பல்களில் இருந்து செலுத்தக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஐஎன்எஸ் அரிஹந்த் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. வங்கக் கடற்பகுதியில் நடைபெற்ற இந்தச் சோதனையில், விண்ணில் ஏவப்பட்ட ஏவுகணை இலக்கைத் துல்லியமாகத் தாக்கியது.

இதன்மூலம் ஏவுகணை அமைப்பின் அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் சரிபாா்க்கப்பட்டுள்ளன. இது இந்தியாவின் உத்திசாா்ந்த தாக்குதல் திறன்களை மேலும் அதிகரிப்பதற்கான முக்கிய மைல்கல்லாகப் பாா்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →