இந்தியா

உலக பட்டினி குறியீடு: 107-வது இடத்திற்கு பின்தங்கியது இந்தியா!

உலக பட்டினி குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 101-வது இடத்திலிருந்து 107-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. 

DIN

உலக பட்டினி குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 101-வது இடத்திலிருந்து 107-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. 

கன்சொ்ன் வோ்ல்டுவைட், வெல்ட் ஹங்கா்ஹில்ஃபே ஆகிய அமைப்புகள் இணைந்து 2022-ஆம் ஆண்டுக்கான சா்வதேச பட்டினிக் குறியீட்டு தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளன.

121 நாடுகளுக்கான இந்த பட்டியலில், இந்தியா 107-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு 94-வது இடத்திலும் 2021 ஆம் ஆண்டு 101-வது இடத்திலும் இந்தியா இருந்த நிலையில் தற்போது மேலும் பின்தங்கியுள்ளது.

இந்த தரவரிசையில் அண்டை நாடுகளான பாகிஸ்தான்(99 ஆவது இடம்), வங்கதேசம்(84), நேபாளம்(81), இலங்கை(64), மியான்மர்(71) ஆகியவை இந்தியாவைவிட முன்னோக்கி உள்ளது. ஆப்கானின்ஸ்தான் தவிர அனைத்து தெற்காசிய நாடுகளைவிடவும் இந்தியா பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பட்டினி குறியீடு புள்ளிகளுக்கும் குறைவாகப் பெற்று சீனா, துருக்கி, குவைத் ஆகிய மூன்று நாடுகளும் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன. 

குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை வளர்ச்சி குன்றிய நிலை, குழந்தை உடல் எடை குறைதல், குழந்தை இறப்பு ஆகியவற்றைக் கொண்டு இந்த உலக பட்டினி குறியீடு கணக்கிடப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிலத்தை விட்டுத் தர மாட்டோம் -உக்ரைன் அதிபா்

திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஆட்சியா்

தொழிலாளா்களின் பிரச்னையை தீா்க்கக் கோரி தனியாா் நிறுவன தொழிலாளி தற்கொலை முயற்சி!

தொடா் விபத்துகளை தடுக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

விழுப்பரம் மாவட்டத்தில் 100 ஹெக்டேரில் மக்காச்சோள செயல் விளக்கத் திடல் அமைக்க இலக்கு!

SCROLL FOR NEXT