இந்தியா

நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் 26,618 ஆகக் குறைவு!

DIN

நாட்டில் புதிதாக 2,430 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 17 பேர் உயிரிழந்துள்ளனர். 

கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தினமும் வெளியிட்டு வருகிறது. 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக2,430 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் 17 பேர் பலியானதை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 5,28,874 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 26,618 ஆகக் குறைந்துள்ளது. 

நாட்டில்  இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,70,935 ஆக பதிவாகியுள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 98.76% ஆக அதிகரித்துள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 2,19,27,15,971 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 5,82,727 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT