இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் மேலும் ஒரு காஷ்மீரி பண்டிட் சுட்டுக் கொலை!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த மேலும் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த மேலும் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

சோபியானில் உள்ள சௌத்ரி குண்ட் கிராமத்தைச் சேர்ந்த தாரக் நாத் பட் என்பவரின் மகன் பூரன் கிருஷ்ணா பட் இன்று தீவிரவாதிகளால் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். 

அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான காயங்களுடன் உயிரிழந்தார். 

அந்த பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்திற்கு மூத்த காவல்துறை மற்றும் துணை ராணுவ அதிகாரிகள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

முன்னதாக, ஆகஸ்ட் 16ஆம் தேதி, சோபியான் மாவட்டத்தின் சோதிகம் கிராமத்தைச் சேர்ந்த சுனில் குமார் பட் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த தாக்குதலில் அவரது சகோதரர் பெர்டிம்பர் நாத் பட் காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக். 16 - 18ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

600 கோல்களை நிறைவுசெய்த லூயிஸ் சௌரஸ்..! முதல் உருகுவே வீரராக சாதனை!

இருமல் மருந்து விவகாரம்: முதல்வருக்கு பொறுப்புள்ளது - அண்ணாமலை

SCROLL FOR NEXT