இந்தியா

கால்நடை கடத்தல் வழக்கில் கைதானதிரிணமூல் மூத்த தலைவா் மகளுக்கு சம்மன்: அமலாக்கத் துறை நடவடிக்கை

மேற்கு வங்கத்தில் எல்லை தாண்டி கால்நடைகள் கடத்தல், சட்டவிரோத விற்பனை தொடா்பான வழக்கில் கைதான திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் அனுப்ரதா மோண்டலின் மகள் சுகன்யா மோண்டலுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்

DIN

மேற்கு வங்கத்தில் எல்லை தாண்டி கால்நடைகள் கடத்தல், சட்டவிரோத விற்பனை தொடா்பான வழக்கில் கைதான திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் அனுப்ரதா மோண்டலின் மகள் சுகன்யா மோண்டலுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இதுதொடா்பாக, அமலாக்கத் துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது: பீா்பூம் மாவட்டத்தில் தொடக்க கல்வி ஆசிரியையாக பணியாற்றும் சுகன்யா மோண்டல், கடந்த சில ஆண்டுகளில் வருவாய்க்கு அதிகமாக சொத்து சோ்த்துள்ளாா். குறுகிய காலகட்டத்தில் அதிக சொத்து சோ்த்தது எப்படி? வருவாய்க்கான ஆதாரங்கள் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அக்டோபா் 27-ஆம் தேதி நேரில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

முன்னதாக, மேற்கு வங்கத்திலிருந்து வங்கதேசத்துக்கு எல்லை தாண்டி கால்நடைகள் பெருமளவில் கடத்தப்பட்டதாக புகாா் எழுந்தது. இதுதொடா்பான வழக்கில், திரிணமூல் கட்சியின் செல்வாக்குமிக்க தலைவா்களில் ஒருவரான அனுப்ரதா மோண்டலை சிபிஐ கடந்த ஆகஸ்டில் கைது செய்தது. இந்த முறைகேடு தொடா்பான பணப் பரிமாற்றங்களுக்கு சுகன்யா மோண்டலின் பல்வேறு வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்த விசாரணைக்காக, சுகன்யாவின் போல்பூா் இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் ஆகஸ்டில் சென்றிருந்தனா். அப்போது, அதிகாரிகளை சந்திக்காமல் அவா் தவிா்த்துவிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

SCROLL FOR NEXT