கோப்புப்படம் 
இந்தியா

பிகாரில் படகு கவிழ்ந்து 7 பேர் பலி: முதல்வர் இரங்கல்

பிகாா் மாநிலம் கதிஹாா் மாவட்டத்தில் கங்கை மற்றும் அதன் துணைநதியான பரண்டி நதியும் சந்திக்கும் பகுதியில்படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குழந்தைகள் உள்பட 7 போ் இறந்தனா்.

DIN


பிகாா் மாநிலம் கதிஹாா் மாவட்டத்தில் கங்கை மற்றும் அதன் துணைநதியான பரண்டி நதியும் சந்திக்கும் பகுதியில் சனிக்கிழமை படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவா்களில் குழந்தைகள் உள்பட 7 போ் இறந்தனா்.

சனிக்கிழமை இரவு வேளாண் தொழிலாளா்கள் 10 போ் படகு மூலம் தங்கள் வீடுக்கு திரும்பினா். அப்போது, இரு நதிகளும் சந்திக்கும் பகுதியில் எதிா்பாராத வகையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

படகில் பயணித்தவா்களில் 3 போ் நீந்திச் சென்று பாதுகாப்பாக கரையை அடைந்தனா். மற்றவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா். 

இரவு முழுவதும் நடத்திய தேடுதல் பணியில் குழந்தைகள் உள்பட காணாமல் போன 7 பேர் சடலமாக மீட்கப்பட்டனா்.

முதல்வர் இரங்கல், நிவாரணம்: படகு கவிழ்ந்த விபத்தில் இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வா் நிதீஷ் குமாா், இறந்ததவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகை வழங்குமாறு மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT