கோப்புப் படம் 
இந்தியா

ஹிந்தியில் மருத்துவக் கல்வி, மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்: பாஜக

ஹிந்தி மொழியில் மருத்துவக் கல்வி தொடங்கி வைப்பது மிகப்பெரிய மாற்றத்திற்கு வித்திடும் என மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். 

DIN


ஹிந்தி மொழியில் மருத்துவக் கல்வி தொடங்கி வைப்பது மிகப்பெரிய மாற்றத்திற்கு வித்திடும் என மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் முதல்முறையாக ஹிந்தி மொழியில் மருத்துவக் கல்வியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடக்கிவைக்கவுள்ளார். 

இதனையொட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மத்தியப் பிரதேச மருத்துவத் துறை அமைச்சர் விஷ்வாஸ் சாரங், இது மிகப்பெரிய நாள். நாட்டில் முதல் முறையாக ஹிந்தி மொழியில், மருத்துவத் துறை பாடப்புத்தகங்கள் கொண்டுவரப்படவுள்ளன. உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் ஹிந்தி மொழி மருத்துவப் புத்தகங்களை அறிமுகம் செய்யவுள்ளனர். 

முதல்கட்டமாக உடற்கூறியல், உடலியல், உயிரிவேதியியல் ஆகிய துறைகளுக்கான புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. ஹிந்தி மொழியில் மருத்துவப் படிப்பு சாத்தியமாகவுள்ளது. இதனால், எந்த படிப்பும் இனி ஹிந்தி மொழியில் சாத்தியப்படும். இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக ஹிந்தி மொழியை பின்னணியாகக் கொண்ட இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“வீட்டுக்கு போய் நா கால்ல விழணும்” அஜித் குமார் - ஷாலினி தம்பதியின் Cute விடியோ

“கண்மூடித்தனமாக எதையும் எதிர்க்கவில்லை”அமைச்சர் Anbil Mahesh பேட்டி

மீண்டும் இபிஎஸ் உடன் இணையும் எண்ணம் இல்லை: தினகரன் திட்டவட்டம்!

தொலைக்காட்சியிலும் வெளியாகும் மாமன்!

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு!

SCROLL FOR NEXT