கோப்புப் படம் 
இந்தியா

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி வாக்களிப்பாரா? ஜெய்ராம் ரமேஷ் பதில்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி வாக்களிப்பார் என்று காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 

DIN

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி வாக்களிப்பார் என்று காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் 22 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு அக்கட்சியைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவும் சசி தரூரும் நேரடியாக மோதுகின்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொதுச் செயலாளர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள், காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் என 9,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி வாக்களிப்பார் என்று காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் இன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள சங்கனக்கல்லுவில் உள்ள முகாமில் ராகுல் காந்தி வாக்களிப்பார்.

ராகுல் காந்தியுடன் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் கலந்துகொண்டுள்ள 40 காங்கிரஸ் உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள் என்று தெரிவித்தார். ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் சனிக்கிழமை பெல்லாரியில் நுழைந்தது. கன்னியாகுமரியில் தொடங்கிய நடைப்பயணம் பெல்லாரியில் 1,000-ஆவது கி.மீ. தொலைவை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவாஜி படத்தில் நடிக்காதது ஏன்? சத்யராஜ் விளக்கம்!

பிகாருக்குள் நுழைந்த பயங்கரவாதிகள்? உச்சகட்ட கண்காணிப்பில் காவல்துறை

காதல்மயம்... கிகி விஜய்!

மறக்க முடியாதது... சாரா யஸ்மின்!

நல்லகண்ணு உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விசாரிப்பு

SCROLL FOR NEXT