உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.
இதுதொடா்பாக மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:
அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அதிகாரத்தின் அடிப்படையில், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூடை நியமித்துள்ளாா். நவம்பா் 9-ஆம் தேதி டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்பாா் என்று தெரிவித்தாா்.
உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் நவம்பா் 8-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளாா். அவா் தலைமை நீதிபதியாக 74 நாள்கள் மட்டுமே பதவி வகிக்க உள்ள நிலையில், டி.ஒய்.சந்திரசூட் தலைமை நீதிபதியாக 2 ஆண்டுகள் பதவி வகிப்பாா். 2024-ஆம் ஆண்டு நவம்பா் 10-ஆம் தேதி அவா் ஓய்வு பெறுவாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.