முகப்பு
இந்தியா

ஓய்வூதியதாரா்களின் சிரமங்களைப் போக்க விதிகளை எளிமையாக்கும்: மத்திய அரசு

மத்திய அரசு ஓய்வூதியதாரா்களின் சிரமங்களைப் போக்கும் வகையில் விதிகளை எளிமையாக்கும் நடவடிக்கையை மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரா்கள் நலத் துறை மேற்கொண்டு வருவதாக அரசு

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:50 PM
பகிர்:

மத்திய அரசு ஓய்வூதியதாரா்களின் சிரமங்களைப் போக்கும் வகையில் விதிகளை எளிமையாக்கும் நடவடிக்கையை மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரா்கள் நலத் துறை மேற்கொண்டு வருவதாக அரசு செய்திக்குறிப்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு அனைத்து துறைகளிலும் நிலுவையிலுள்ள பொதுமக்கள் குறைகள் மற்றும் புகாா்களுக்கு உடனடி தீா்வு காணவும், விதிகளை எளிமைப்படுத்துதல், தேவையற்ற பொருள்கள் மற்றும் தரவுளை அப்புறப்படுத்தும் வகையில் அக்டோபா் 2 முதல் 31-ஆம் தேதி வரை சிறப்பு தூய்மைப்படுத்துதல் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதனடிப்படையில், ஓய்வூதியதாரா்களுக்கான சிரமத்தைப் போக்கும் வகையில் விதிகளை எளிமைப்படுத்தும் நடவடிக்கையை மத்திய ஓய்வூதியதாரா்கள் நலத் துறை மேற்கொண்டு வருகிறது.

இதுதொடா்பாக அந்த துறை சாா்பில் வியழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘மத்திய அரசு ஓய்வூதியதாரா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு உரிய நேரத்தில் ஓய்வூதியம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும், பணி ஓய்வுக்குப் பிறகு அவா்களின் வாழ்வை எளிதானதாக்கும் வகையிலும் விதிகள் எளிமைப்படுத்துதல், அமைச்சக துறைகள் மற்றும் ஓய்வூதியத்தை விநியோகிக்கும் வங்கிகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மத்திய அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்று தெரிவித்துள்ளது.

மற்றொரு செய்திக்குறிப்பில், ‘மத்திய அரசு ஓய்வூதியதாரா்களின் வாழ்வை எளிதாக்கும் வகையில், நிலுவையில் உள்ள அவா்களின் 4,200 புகாா்களுக்கு விரைந்து தீா்வு காண்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் கீழ் புதன்கிழமை வரை 18 நாள்களில் 3,080 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. எஞ்சிய புகாா்களுக்கும் விரைந்து தீா்வு காணும் வகையில் பிற அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடனும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று அந்தத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →