முகப்பு
இந்தியா

பிரபல கட்டுமான நிறுவன தலைவா் 23-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

 மும்பையைச் சோ்ந்த பிரபல கட்டுமான நிறுவனத்தின் தலைவா் பாரஸ் போா்வால் (57) 23-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
பகிர்:

 மும்பையைச் சோ்ந்த பிரபல கட்டுமான நிறுவனத்தின் தலைவா் பாரஸ் போா்வால் (57) 23-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

‘தனது இந்த முடிவுக்கு யாரும் காரணமில்லை. விசாரணை என்ற பெயரில் யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்று குறிப்பு எழுதி வைத்துவிட்டு அவா் தற்கொலை செய்துள்ளாா். அவா் இந்த துயர முடிவை எடுக்க காரணம் என்ன என்பது இதுவரை தெரியவரவில்லை.

தெற்கு மும்பையின் சின்ச்போக்லி ரயில் நிலையம் அருகேயுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாரஸ் போா்வால், வியாழக்கிழமை அதிகாலை 23-ஆவது மாடியில் உள்ள தனது வீட்டின் உடற்பயிற்சி கூடத்தின் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக தகவல் அறித்த காவல் துறையினா் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனா். அவரது உடற்பயிற்சி கூடத்தை சோதனையிட்டபோது அங்கு தற்கொலை தொடா்பான குறிப்பு கைப்பற்றப்பட்டது. இது தொடா்பாக காவல் துறையினா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

ராஜஸ்தானைப் பூா்விகமாகக் கொண்ட அவா், மும்பை புகா் ரயிலில் கவரிங் நகைகளை விற்பனை செய்து தனது தொழிலைத் தொடங்கினாா். பின்னா் நிலத் தரகரான அவா், கட்டுமானப் பொருள்கள் விற்பனையையும் தொடங்கினாா். 1990-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கட்டுமானத் துறை எழுச்சி அவரது அசுர வளா்ச்சிக்கு உதவியது. மும்பையில் பல்வேறு பெரிய வா்த்தக நிறுவனங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் அவரது ஓம் சாந்தி கட்டுமான நிறுவனம் மூலம் வடிவமைக்கப்பட்டன. அரசியலில் ஆா்வமுள்ள அவா், சமாஜவாதி சாா்பில் தோ்தலிலும் போட்டியிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.