இந்தியா

ஜம்முவில் அதிகரிக்கும் டெங்கு: இதுவரை 6 பேர் பலி! 

DIN

ஜம்முவில் கடந்த சில வாரங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகின்றது. 2013-க்குப் பிறகு மிகப்பெரிய தொற்று பாதிப்பு என்று மருத்துவ நிபுணர் கூறுகின்றனர். 

இதுகுறித்து ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஷஷி சுதன் ஷர்மா கூறுகையில், 

ஜம்முவில் 3,000க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்று காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்முவில் இதுவரை 3,376 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த வாரத்திலிருந்து டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. காய்ச்சலுடன் வரும் நோயாளிகளிடையே டெங்கு அறிகுறிக்கான நேர்மறைத்தன்மை அதிகரித்துள்ளது.

மருத்துவமனையில் சேர்க்கும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கொசுக்களால் பரவும் பருவகால வைரஸ் நோய் அனைத்து பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருவதாகவும், மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

தினமும் 80-90 குழந்தைகள் மற்றும் கிட்டத்தட்ட 50-60 பெரியவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். 

தாமதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதே இறப்புக்கு காரணம். நிலைமையை சமாளிக்க மருத்துவமனை முழுமையாக தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT