இந்தியா

செப்டம்பர் மாத ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்ய அவகாசம்

DIN


புது தில்லி: கடந்த செப்டம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்ய கூடுதலாக ஒரு நாள் கால அவகாசத்தை நீட்டித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரித்துறை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பிட்ட சில வரி செலுத்துவோருக்கு மாதாந்திர ஜிஎஸ்டி செலுத்துவதற்கான கடைசி நாள் 20ஆம் தேதி என்ற நிலையில், வியாழக்கிழமையன்று ஜிஎஸ்டி ரிட்டர்ன் செய்வதற்கான இணையதளத்தில் சுணக்கம் ஏற்பட்டதாக வரி செலுத்துவோர் புகார் அளித்திருந்த நிலையில், இன்று ஒரு நாள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் சுணக்கம் ஏற்பட்டதால், வரி செலுத்துவோருக்கு கூடுதலாக ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டதாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT