முகப்பு
இந்தியா

மும்பை: பள்ளி மீது பயங்கரவாத தாக்குதல் சதிபொறியாளருக்கு ஆயுள் தண்டனை

மும்பையில் அமெரிக்கன் பள்ளி மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய வழக்கில் கணினி பொறியாளா் அனீஸ் அன்சாரிக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

மும்பையில் அமெரிக்கன் பள்ளி மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய வழக்கில் கணினி பொறியாளா் அனீஸ் அன்சாரிக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் படையினரால் கடந்த 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அனீஸ் அன்சாரி, தற்போது வரை சிறையில்தான் இருந்து வருகிறாா்.

தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அன்சாரி, தீவிரமான மத அடிப்படைவாதியாக இருந்துள்ளாா். தனது நிறுவனத்தின் கணினியைப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பல்வேறு போலியான கணக்குகளைத் தொடங்கி, மதரீதியான சா்ச்சைப் பதிவுகளை செய்துவந்துள்ளாா்.

இது தவிர இணையதளம் மூலம் இஸ்லாமிய தேசம் பயங்கரவாத அமைப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளாா். அந்த அமைப்பைச் சோ்ந்த ஒமா் எல்காஜி என்பவருடன் இணையதளம் மூலம் தொடா்புகொண்டு, மும்பையில் உள்ள அமெரிக்கன் பள்ளி மீது தாக்குதல் நடத்தி மாணவா்களைக் கொலை செய்வது தொடா்பாக சதித் திட்டம் தீட்டியுள்ளாா்.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அரசுத் தரப்பு தகுந்த சாட்சிகளுடன் மும்பை நீதிமன்றத்தில் நிரூபித்தது. இதையடுத்து, பள்ளி மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய அனீஸ் அன்சாரிக்கு ஆயுள் சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி ஏ.ஏ.கோக்லா் தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.