இந்தியா

போக்குவரத்து விதிமீறலுக்கு அபராதம் விதிக்கப்படாது: குஜராத் அரசு அதிரடி!

குஜராத்தில் தீபாவளியின் போது போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

DIN

குஜராத்தில் தீபாவளியின் போது போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பை குஜராத் உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். கூட்டத்தில் அவர் பேசுகையில், 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 27ம் தேதி வரை குஜராத்தில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரிடம் போலீசார் அபராதம் வசூலிக்க மாட்டார்கள்.

முதல்வர் பூபேந்திர படேலின் வழிகாட்டுதலின்படி, தீபாவளியின் போது மக்களுக்கு கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை அளிக்க, மாநில உள்துறையால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார். 

அக்டோபர் 21 முதல் அக்டோபர் 27 வரை, குஜராத்தில் போக்குவரத்து போலீசார் மக்களிடம் அபராதம் வசூலிக்க மாட்டார்கள்.

இந்த காலகட்டத்தில் தலைக்கவசம், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் யாராவது பிடிபட்டால் அல்லது வேறு ஏதேனும் போக்குவரத்து விதிகளை மீறுவது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு போலீசார் மலர் கொடுப்பார்கள் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

பாரதிய ஜனதா கட்சி ஆளும் குஜராத்தில் டிசம்பர் மாத இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.

வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்ட கோவத்ச துவாதசி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் தொடக்கமாக இருந்தது. தீபத் திருவிழாவின் முக்கிய நாளான லட்சுமி பூஜை அக்டோபர் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

பெரியார் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை!

SCROLL FOR NEXT