சூரிய கிரகணத்தை யொட்டி ஒடிசாவில் பொது விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் வருகிற 25-ஆம் தேதி மாலை 5.10 மணி முதல் 6.30 மணி வரையில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதையொட்டி, கோயில்களில் நடை அடைக்கப்படுவது வழக்கம். இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் தென்படும் இந்த சூரிய கிரகணம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் தமிழகத்தை பொறுத்தவரை மாலை 5.14 மணிக்கு தொடங்கி 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சூரிய கிரகணத்தையொட்டி ஒடிசாவில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க- உலகத்தின் வளர்ச்சிக்கு சீனா தேவை! அதிபராகும் ஷி ஜின்பிங் பேச்சு
சூரியன் - சந்திரன் - பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் என்பது ஏற்படும். அறிவியல்படி சந்திரனானது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வரும் போது சந்திரனால் சூரியன் மறைக்கப்படுவதால் பூமியில் உள்ள நம் கண்களுக்கு சூரியன் தெரியாமல் போகின்றது. இதையே சூரிய கிரகணம் என்கிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.