ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்கள் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி பல்வேறு பகுதிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அக்நூர் பகுதியில் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் விளக்கு ஏற்றி, லஷ்மி, விநாயகர் படங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். மேலும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும், நாட்டு மக்கள் அமைதியுடன் பண்டிகைகளைக் கொண்டாடும் வகையில், வீரர்கள் எல்லையில் விழிப்புணர்வுடன் செயல்படுவோம் எனவும் இக்பால் சிங் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.