இந்தியா

அபுதாபியில் பாஸ்போர்ட் இல்லாமல் சிக்கித் தவிக்கும் பஞ்சாபி தொழிலாளர்கள்!

DIN

அபுதாபியில் 100-க்கும் மேற்பட்ட பஞ்சாபி புலம்பெயர் தொழிலாளர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் சிக்கித் தவிப்பதாகவும், அவர்கள் இந்திய அரசிடம் உதவி கோரியதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த பஞ்சாபி தொழிலாளர்கள், திடீரென பணியிலிருந்து நீக்கப்பட்டு, அவர்களின் பாஸ்போர்ட் திருப்பி தராமல் முடக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். 

அபுதாபியில் சிக்கித் தவிக்கும் பஞ்சாபி தொழிலாளர்கள் விரைவில் நாடு திரும்பக் கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு சமூக ஆர்வலர் தில்பாக் சிங் கடிதம் எழுதியுள்ளார்.  

இதையடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களுக்கு உதவ துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு ஜெய்சங்கர் உத்தரவிட்டுள்ளார், மேலும் அவர்கள் இந்தியாவுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு அதி கனமழைக்கான ’சிவப்பு’ எச்சரிக்கை!

மும்பை அணியின் ஒற்றுமையை உறுதி செய்திருக்க வேண்டும்: ஹர்பஜன்

உடனடியாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும்: இபிஎஸ்

சென்னை, 7 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT