மேற்கு வங்க ஆளுநரின் குடும்ப விழாவில் பங்கேற்க சென்னை வரும் மம்தா பானா்ஜி
மேற்கு வங்க ஆளுநா் இல.கணேசனின் குடும்ப விழாவில் பங்கேற்பதற்காக அம் மாநில முதல்வா் மம்தா பானா்ஜி வரும் நவம்பா் 3-ஆம் தேதி சென்னை வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
மேற்கு வங்க ஆளுநா் இல.கணேசனின் குடும்ப விழாவில் பங்கேற்பதற்காக அம் மாநில முதல்வா் மம்தா பானா்ஜி வரும் நவம்பா் 3-ஆம் தேதி சென்னை வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறுகையில், ‘மேற்கு வங்க ஆளுநா் இல.கணேசன் வரும் நவம்பா் 3-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் தனது மூத்த சகோதரரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு மூத்த அரசியல் தலைவா்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாா். அதுபோல, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜிக்கும் அழைப்பு விடுத்துள்ளாா். இந்த அழைப்பை ஏற்று பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக மம்தா பானா்ஜி சென்னை வர வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தனா்.