முகப்பு
இந்தியா

உ.பி.யில் சாலை விபத்து: 5 பேர் பலி, 5 பேர் காயம்! 

உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் கார் கம்பத்தில் மோதி நெடுஞ்சாலையில் கவிழ்ந்ததில் குழந்தை உள்பட 5 பேர் பலியாகினர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் கார் கம்பத்தில் மோதி நெடுஞ்சாலையில் கவிழ்ந்ததில் குழந்தை உள்பட 5 பேர் பலியாகினர். 

பிரயாக்ராஜ் மாவட்டத்தின் ஹண்டியா காவல் நிலையப் பகுதியில் வாகனம் சாலை தடுப்பின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. பாதிக்கப்பட்டவர்கள் காலை 5.45 மணியளவில் குழந்தைக்கு மொட்டையடிக்கும் நிகழ்ச்சிக்கு விந்தியாச்சலத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. 

ஹண்டியா வட்ட அதிகாரி சுதிர் குமார் கூறுகையில், 

இந்த விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், மேலும் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

உயிரிழந்தவர்கள் ரேகா தேவி (45), கிருஷ்ணா தேவி (70), சவிதா (36), ரேகா (32) மற்றும் ஓஜஸ் (ஒன்றரை வயது) என அடையாளம் காணப்பட்டனர்.

விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டத்தின் பிற உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களுக்கு உரியச் சிகிச்சை அளிக்குமாறும் உத்தரவிட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →