கரோனா பொதுமுடக்கத்தால் மீண்டும் தலைதூக்கும் கொடிய நோய்: அச்சம் தெரிவிக்கும் நிபுணர்கள் 
இந்தியா

கரோனா பொதுமுடக்கத்தால் மீண்டும் தலைதூக்கும் கொடிய நோய்: அச்சம் தெரிவிக்கும் நிபுணர்கள்

அமெரிக்கா, பிரிட்டன், மொசாம்பிக் உள்ளிட்ட நாடுகளில் இந்த ஆண்டு மீண்டும் போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

PTI


கரோனா தொற்றுப் பரவத் தொடங்கிய சில காலத்துக்கு போலியா தடுப்பு மருந்துகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்ததன் எதிரொலியாக, அமெரிக்கா, பிரிட்டன், மொசாம்பிக் உள்ளிட்ட நாடுகளில் இந்த ஆண்டு மீண்டும் போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையைச் சேர்ந்த நிபுணர்கள் குழு இது குறித்து கூறியிருப்பதாவது, உலகின் ஏதேனும் ஒரு மூலையில், போலியோ வைரஸ் இருப்பது உறுதி செய்யப்படுவது, ஒட்டுமொத்த உலகத்துக்குமே அச்சுறுத்தலாக அமையும் என்று தெரிவித்துள்ளனர்.

அறக்கட்டளையின் போலியோ குழுவுடைய ஆராய்ச்சி மற்றும் ஆய்வின் தொழில்நுட்ப உதவி இயக்குநர் டாக்டர் ஆனந்த் சங்கர் பந்தியோப்பாத்யாய் கூறுகையில், சில மாதங்களுக்கு முன்பு, லண்டன் மற்றும் நியூ யார்க் நகரங்களில் இருந்து வெளியேறிய கழிவு நீர்களில் போலியோ வைரஸ்கள் கண்டறியப்பட்டன.

மொசாம்பிக் பகுதியில் மே மாதத்திலும், மலாவியில் பிப்ரவரியிலும் புதிய போலியோ பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

புதிய போலியோ வைரஸ்கள் கண்டறியப்படுவது, குறைந்த எதிர்ப்பாற்றலையே காட்டுகிறது. 2020ஆம் ஆண்டு உலக நாடுகளை முதல் முறையாக கரோனா வைரஸ் பாதித்தபோது, குழந்தைகளையும், சுகாதாரப் பணியாளர்களையும் காக்கும் வகையில் சுமார் 4 மாதங்கள் வரை போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.  

இதன் காரணமாக, சில நாடுகளில் போலியோ வைரஸ் பரவக் காரணமாக அமைந்துவிட்டது என்று பிசிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

SCROLL FOR NEXT